கண்கள் கலந்திருக்க
காதல் பிறந்திருக்க
கிள்ளை மகிழ்ந்திருக்க
கீதம் இசைத்திருக்க
குடும்பம் அறிந்துவிட
கூத்து முடிந்துவிட
கெட்டி முழங்கிவிட
கேள்வியற்று மகிழ்திருக்க
கையில் மழலை கிடைத்துவிட – காதல்
கொள்கையில் விரிசல்விழ – வாழ்க்கை
கோலம் புரிந்துவர – தலைவன்
கௌதமர் நிலையில் மௌனித்தான்
படைக்கும் பிரமன்
நான் என்றால்
பாவையரை படைக்கமாட்டேன்
படைக்கும் நிலை வந்திருப்பின்
பாவையரின் மனம் கண்டறியும்
மந்திரக்கோலை
பாவம் ஆண்களிடம்
கொடுத்திருப்பேன்
கட்டழகுப் பெட்டகம் - இவள்
கன்னியென்னும் புத்தகம் - இவள்
கடந்து செல்லும் யுகங்களிலும் - அவனுக்கு
கசந்திடாத சித்திரம் இவள்………
வையத்து பால் நிலவோ
கானகத்து மானினமோ
களிபூட்டும் மெல்லினமோ
கள்ளி நீ
எவ்விடத்து ராட்சசியோ
என்னைக் கொல்லாமல்
சொல்………….
மாரனவன் விட்ட அம்பு
மனதில் பட்டதினால்
மாது இவள் மாறிவிட்டாள்
மனதை கொடுத்துவிட்டாள்
மென்னிசையில் சுரமெடுத்து
மெல்லினத்தாள் இதழ் விரித்து
மீட்டுகின்றாள்
மெதுவா மெதுவா
ஓர் காதல் பாட்டு
கண்ணதில் தொடங்கும் பாடம்
கனமது இதயத்தில் ஏறும்
மனமதில் மனனம் ஆகும்
இதழ்களில் ஐனனம் ஆகும்
இதுவே காதலாகும்
இருவிழி நுழைந்த காதல்
இதழ் வழி வருதல் வேண்டும்
இதழ் வழி வராத காதல்
இருவிழி நுழைந்தென்ன
இதயத்தில் இருந்தென்ன………..
இருவிழி நுழைந்து
இதயத்தில் கலந்து
இனி நீயே என் உயிர் என்ற
இனியவளே....
இனியவனே
எனது கணவன்
என்று சொல்லி சென்றதேன்
இதயத்தில் உன்னை எழுதி வைத்தேன்
இருவிழியில் உன்னை பதிய வைத்தேன்
உதடுகளில் உன்னை உறைய வைத்தேன்
உருவத்தை என்னுள் பதுக்கி வைத்தேன்
இப்படி வைத்திருந்த என்னால்
இதழ்வழி காதலைச் சொல்ல
இறுதிவரை துணிவு இல்லை
விழி வீசினாள்
அவள்
விருந்தானன்
அவன்
கொடுத்தான்
அவன்
எடுத்தாள்
அவள்
எதை ?
இதயத்தை
உயிரை
வாழ்வை
இன்று வரை
எத்தனை ஜோடி
கண்களை கண்டிருப்பேன்
இவள்
கண்கள் மட்டும்
ஏன் இப்படி ?
என்னை
சொல்லாமல்
கொல்கின்றது
உணவில் வெறுப்பு
உள்ளத்தில் தவிப்பு
நித்திரை துறப்பு
நினைத்தவை மறப்பு
இத்தனையும் இருப்பின்
மாத்திரைக்கு கட்டுப்படா
மனதுக்குள் புகுந்துவிட்ட
காதல் வைரஸ் பெருகியதன்
அறிகுறியாம்
வைரஸ் இது அழியாது
அமிழ்ந்து போக
மாத்திரை இல்லை
மார்க்கம் உண்டு
இதயத்தில் உள்ளதை
இதழ்வழி எடுத்துவிடு
வார்த்தை வாந்தியாக…..
மனதில் வைத்து பூஜித்து
மௌனமாய் அவளை நேசித்து
கண்ணில் காதல் வாசித்து
கவியாய் அதை பதியவைத்துள்ள
அவன்
மங்கை அருகாக
மனது ஊமையாக
மௌனம் மொழியாக
மயங்குவது ஏன்?
மனதில் உள்ள காதலை
மறைக்காமல் சொல் - இல்லை
மறந்து உன் வழிசெல்
பாதை வழிபோனவள்
பார்வை வீசிப்போனாள்
பாவம் இவன்
விழியசைவு பார்த்து
வழியசைவு மறந்துவிட்டான்
காதல் என்பது மூன்றெழுத்து
காதலர்க்கு இதிலே மூச்சிருக்கு
கா என்பது காத்திருப்பு
த என்பது தவித்திருப்பு
ல் என்பது லயித்திருப்பு
மூன்றிருப்பிலும் வெற்றியெனின்
கிடைப்பதோ மணத்திறப்பு
சாலை தோறும் காத்துள்ளான்
அவள் காதலுக்காக
சாகும்வரை தொடருமென்று
அவனுக்கு தெரியாமல்
ஓரு நாள்
நிலத்தை
கொண்டுவிட கடல்
யுகம் யுமாய் காத்தருப்பதுபோல்
நானும் காத்துள்ளேன் - நீ
சொல்லும் - ஓர்
சொல்லுக்காக
இதயம் இரண்டு இடம் மாறுது
இதயத்தில் ஏதோ தடம் மாறுது
கண்கள் இரண்டு கவிபாடுது – காதல்
காவியம் எழுத கருவாகுது
பெண்மை இங்கு ருதுவாகுது
பேசா ஓவியம் போலாகுது
திண்மை இங்கு தீயானது
தீண்ட தீண்ட மேலாகுது
நாம் இங்கு உருவாகுது – அதனால்
நல்லது கெட்டதில் சேர்ந்தாடுது
விந்தை தேடும் மானிடமே - இதற்கு
விஞ்ஞானத்தில் விளக்கம் சொலலுங்களே