திரைப் படம்: ராமு
சீர்காழி கோவிந்தராஜன், T.M. சௌந்தரராஜன்


பாடலுக்கு இங்கே சொடுக்கவும்

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ..

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ..

முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்ணா!

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்

படம் : நானும் ஒரு பெண்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் : பி.சுசீலா
பாடல் வரிகள் : கண்ணதாசன்


கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
(கண்ணா...)


மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா
கண்ணா... கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
(கண்ணா...)

ஆண்

இல்லற கணணி
இயங்கத் தேவையான
மென்பொருள்

மழை

பசுமையை வாழ்த்த
தேவையான அறுகரிசிஅலை

மண்ணவளை தன்னுள்ளே
கொண்டுவிட
கடலவன் செய்யும்
படையெடுப்பு

தாய்

மங்கைக்கு
மழலை கொடுத்த
பட்டம்

நோய்

தன்னை நினைக்க
கடவுள் தரும்
ஓர் சந்தர்பம்

குடும்பம்

இன்பமும் துன்பமும்
வரவேற்கப்படும் இடம்

கோபம்

உன்னை விழுங்க
உன்னிடமே
உள்ள
நச்சுப்பாம்பு

சந்தோசம்

உள்ளத்திற்கு
வழங்கப்படும்
சத்து குளிசை

Followers

Follow by Email