Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

மொட்டவிழும் மலரைபோல்
மௌனமாய் ஒர் ஆண்டு மலர்கின்றது
மலரும் மலரோ மாயவன் பாததிற்கு
மலரும் ஆண்டோ மனிதா உன் கைகளுக்கு

ஆண்டொன்று கிடைத்தது என்று
அகமகிழ்ந்து இருக்கையில்
நேரமது கரைந்து நாளாகும்
நாட்கள் வளர்ந்து கிழமையாகும்
கிழமை நகர்ந்து மாதமாகும்
மாதங்கள் ஓடி வருடம் முடிந்துவிடும் - அதனால்

மனிதா ! எழுந்திரு
கையில் கிடைத்த புத்தாண்டோ
கைக்கு கட்டுபட்டு இருப்பதில்லை
கை படாவிட்டாலும் இருப்பதில்லை
கிடைத்த ஆண்டின் ஒவ்வொரு நிமிடத்தையும்
உன்கையில் எடுத்திடு உறங்காமல் செயல்படு

கட்டங்கள் பார்த்து காலம் கடக்கட்டும் என இராமல்
திட்டங்கள் வகுத்து திறம்பட செயல்படு
சட்டென்று நினைத்து சடுதியாய் இயங்காமல்
சற்று யோசித்து சரியான முடிவெடு
பட்டென்று உழைத்து பணம் மட்டும் சேர்க்காமல்
பற்றுப் பாசத்தோடு பணத்தையும் சேர்த்திடு
சட்டென்று உழைத்து சரித்திரம் படைக்க நினைக்கமல்
சொட்டு பணத்தில் சுற்றத்தையும் உயர்த்திடு

ஆண்டொன்று பிறந்து அது வளர
அதனுடன் சேர்ந்து வயதொன்று
வளர்ந்தது என இராமல்
மலரும் ஆண்டுடன் மனிதா
வாழ்க்கையை வளர்த்து
வாழ்க்கையை வாழ்ந்திடு



குழந்தை இவன் சிரிப்பினிலே
கோடி செல்வம் குவியும்
குண்டுக் கன்னம் தொடுகையிலே
கோடி இன்பம் தோன்றும்
கள்ளன் இவன் தவழ்கையிலே
கண்ணன் அவன் நினைவு வரும்
கள்ளச் சிரிப்பினிலே
கவிதை பல தானே வரும்

மழலை இவன் இல்லையெனில்
மங்கைக்கோ வாசம் இல்லை
மண்ணில் உள்ள செல்வங்களில்
மகிழ்ச்சி தரும் செல்லம் இவன்
செல்லம் இவன் இல்லையெனில்
செல்லுமிடத்தில் உயர்வு இல்லை
செல்வம் தேடும் மானிடமே முதலில்
செல்லம் இவனை தேடிடுங்கள்
செல்வமது தேடிவரும்

மனதே மனதே வருந்தாதே
மாலவன் துணையுண்டு மயங்காதே
இனியும் தடையென்று நினையாதே
இனி நல்ல வழியுண்டு மறக்காதே

தோல்வியை கண்டு துவளாதே
தோன்றியது வீண் என்று எண்ணாதே – நீ
தோப்பில்லா மரமென்று நினைக்காதே – அவனை
தோத்திரம் செய்வதை நிறுத்தாதே

மன்மதன் அழகு அவன் மேனி
மழலையின் சிரிப்பு அவன் இதழில்
கருணையின் வெள்ளம் அவன் கண்கள்
கலைகளின் மூலம் அவன் கழல்கள்

கண்ணன் என்பது அவன் பெயராம்
கருணை என்பது அவன் ஊராம்
எம்மவன் கண்ணணை நாடுங்கள்
எல்லா சுகங்களும் நல்கிடுவான்

கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்
கள்ளன் வேண்டும் கருணை உள்ளம்
கண்களிரண்டும் அவன் கழல்கள்
காணும் நாளே திருநாளாம்

புத்தம் புதிய பூமியிதை
பூக்களால் நிரப்பி
பக்தர்கள் உங்களுக்கு
பரமனவன் தந்துள்ளான்
பித்தம் பிடித்து நீங்கள் - பாரை
பிய்த்தெறிய நினைக்காமல்
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !

சத்தமது ஏதுமின்றி
சந்தோசமதை நிரப்பி
சலசலக்கும் அருவியோடு
சந்தனத்து மணம் பரப்பி
வித்தை பல மண்ணில் வைத்து
விருந்து போல பழங்கள் வைதது
கடல் நிறைய மீனை வைத்து
கரைக்கு வரும் அலையை படைத்து
எல்லையில்லா நிலம் கொடுத்து
எதுவும் விளையும் மண் கொடுத்து
வளரும் பசுமை பல கொடுத்து
வளர்த்துவிட மழை கொடுத்து
சிரிக்கும் குணம் கொடுத்து
சிந்திக்கும் மனிதராக உனைபடைத்து
விருப்பம் போல பூமியிதை
விண்ணால் மூடி தந்துள்ளான்
மனிதரென்னும் ஆறறிவே !
மனிதம் கொன்று மண்ணை கொல்லாமல்
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !

உயிர் வாழ விட்ட மண்ணை
உரசிப்பார்க்க நினைக்கின்றாய்
எல்லையற்று தந்த மண்ணை
எல்லை போட்டு கூறுபோட்டாய்
வனத்தோடு தந்த மண்ணை
வாழவென்று வெட்டிவிட்டாய்
கடலோடு தந்த மண்ணை
கழிவுநீர் திருப்பிவிட்டாய்
நீருக்காய் தோண்டிய மண்ணில்
நிதமும் செல்வம் எடுக்கின்றாய்
விண்ணை சுற்றி தந்த மண்ணை
விண்ணை அறிவதாக துளைத்துவிட்டாய்
விஞ்ஞானத்தால் வெல்வதாக மண்ணை
விண்ணோடு நஞ்சை கலந்துவிட்டாய்
இத்தனையும் போதாதேன்று மண்ணில உன்
இனத்தவரை உயிரோடு; புதைத்தாய்
இத்தனை நீ செய்தும் இயற்கை உன்னிடம்
இரக்கமாய் இருப்பதெல்லாம்
இனிவரும் பரம்பரைக்காக
அதனால் மண்ணை
பக்குவமாய் வைத்திருங்கள்
பரம்பரைக்கு உதவிடுமே !

மனிதா!
உன்னை
எச்சரிக்கை செய்யத்தான்
எரிமலை முதல் சுனாமி வரை
அச்சுறுத்தல் பாடங்கள்
அதற்கும் நீ அசைந்ததாக தெரியவில்லை
ஒன்றை மட்டும் நினைவில் வை
உன்னை விட இயற்கை
உயர்ந்தது என்பதும்
அது நினைத்துவிட்டால்
ஒரு நிமிடம் போதும்
எல்லாம் முடிக்க
ஆதலால்
இன்றே முடிவெடு
இயற்கையோடு வாழ்ந்திடு
இனிதே நலம்பெற்று
இனி வரும் பரம்பரைக்கு
இயற்கையை
பக்குவமாய் வைத்திரு
பரம்பரைக்கு உதவிடுமே !

Followers