கண்கள் கலந்திருக்க
காதல் பிறந்திருக்க
கிள்ளை மகிழ்ந்திருக்க
கீதம் இசைத்திருக்க
குடும்பம் அறிந்துவிட
கூத்து முடிந்துவிட
கெட்டி முழங்கிவிட
கேள்வியற்று மகிழ்திருக்க
கையில் மழலை கிடைத்துவிட – காதல்
கொள்கையில் விரிசல்விழ – வாழ்க்கை
கோலம் புரிந்துவர – தலைவன்
கௌதமர் நிலையில் மௌனித்தான்
படைக்கும் பிரமன்
நான் என்றால்
பாவையரை படைக்கமாட்டேன்
படைக்கும் நிலை வந்திருப்பின்
பாவையரின் மனம் கண்டறியும்
மந்திரக்கோலை
பாவம் ஆண்களிடம்
கொடுத்திருப்பேன்
குழந்தை இவன் சிரிப்பினிலே
கோடி செல்வம் குவியும்
குண்டுக் கன்னம் தொடுகையிலே
கோடி இன்பம் தோன்றும்
கள்ளன் இவன் தவழ்கையிலே
கண்ணன் அவன் நினைவு வரும்
கள்ளச் சிரிப்பினிலே
கவிதை பல தானே வரும்
மழலை இவன் இல்லையெனில்
மங்கைக்கோ வாசம் இல்லை
மண்ணில் உள்ள செல்வங்களில்
மகிழ்ச்சி தரும் செல்லம் இவன்
செல்லம் இவன் இல்லையெனில்
செல்லுமிடத்தில் உயர்வு இல்லை
செல்வம் தேடும் மானிடமே முதலில்
செல்லம் இவனை தேடிடுங்கள்
செல்வமது தேடிவரும்
