ஆண்

இல்லற கணணி
இயங்கத் தேவையான
மென்பொருள்

மழை

பசுமையை வாழ்த்த
தேவையான அறுகரிசி



அலை

மண்ணவளை தன்னுள்ளே
கொண்டுவிட
கடலவன் செய்யும்
படையெடுப்பு

தாய்

மங்கைக்கு
மழலை கொடுத்த
பட்டம்

நோய்

தன்னை நினைக்க
கடவுள் தரும்
ஓர் சந்தர்பம்

குடும்பம்

இன்பமும் துன்பமும்
வரவேற்கப்படும் இடம்

கோபம்

உன்னை விழுங்க
உன்னிடமே
உள்ள
நச்சுப்பாம்பு

சந்தோசம்

உள்ளத்திற்கு
வழங்கப்படும்
சத்து குளிசை

மொட்டவிழும் மலரைபோல்
மௌனமாய் ஒர் ஆண்டு மலர்கின்றது
மலரும் மலரோ மாயவன் பாததிற்கு
மலரும் ஆண்டோ மனிதா உன் கைகளுக்கு

ஆண்டொன்று கிடைத்தது என்று
அகமகிழ்ந்து இருக்கையில்
நேரமது கரைந்து நாளாகும்
நாட்கள் வளர்ந்து கிழமையாகும்
கிழமை நகர்ந்து மாதமாகும்
மாதங்கள் ஓடி வருடம் முடிந்துவிடும் - அதனால்

மனிதா ! எழுந்திரு
கையில் கிடைத்த புத்தாண்டோ
கைக்கு கட்டுபட்டு இருப்பதில்லை
கை படாவிட்டாலும் இருப்பதில்லை
கிடைத்த ஆண்டின் ஒவ்வொரு நிமிடத்தையும்
உன்கையில் எடுத்திடு உறங்காமல் செயல்படு

கட்டங்கள் பார்த்து காலம் கடக்கட்டும் என இராமல்
திட்டங்கள் வகுத்து திறம்பட செயல்படு
சட்டென்று நினைத்து சடுதியாய் இயங்காமல்
சற்று யோசித்து சரியான முடிவெடு
பட்டென்று உழைத்து பணம் மட்டும் சேர்க்காமல்
பற்றுப் பாசத்தோடு பணத்தையும் சேர்த்திடு
சட்டென்று உழைத்து சரித்திரம் படைக்க நினைக்கமல்
சொட்டு பணத்தில் சுற்றத்தையும் உயர்த்திடு

ஆண்டொன்று பிறந்து அது வளர
அதனுடன் சேர்ந்து வயதொன்று
வளர்ந்தது என இராமல்
மலரும் ஆண்டுடன் மனிதா
வாழ்க்கையை வளர்த்து
வாழ்க்கையை வாழ்ந்திடு

11 November 2009

நாக்கு

சொற் பந்துக்கு
எப்பக்கத்துக்கும் ஆடக்கூடிய
துடுப்பாட்டக்காரன்

நிலவு

பெண்ணை நிலவுக்கு ஒப்பிடுவர்
ஆராய்வதற்கு சரி-ஆனால்
ஆனந்தமாய் வாழ்வதற்கு?

உடை

உயிர் கொண்ட சட்டைக்கு
ஊர் போடும் சட்டை


கண்

மனம் நினைத்ததை
மறுஒளிபரப்பு செய்வது

திருமணம்

இல்லறத்திற்கு
முகவுரை

மனது

எல்லாவற்றையும் பதிந்து
அதற்கு உகந்த நேரத்தில்
அசைபோடும் நினைவுபெட்டகம்

பெண்

ஆணை ஆள்வதற்கு
ஆண்டவன் கண்ட ஆயுதம்

மலர்

தேனீக்களுக்கு உணவு
தரும் கற்பகதரு

வாழ்க்கை பாடத்தை
கற்பிக்கும்
ஆசான்

குழந்தை

ஆணும் பெண்ணும்
குலவியதற்கு
ஆண்டவன் தந்த பரிசு

ஓமோன்கள் செய்த சேட்டையால்
ஓன்று சேர்ந்தவை செய்த மாயம்

கள்ளம் இல்லா
வெள்ளை உள்ளம்
கனவுகள் இல்லா
நினைவுகள் கொண்ட
கடவுளின் அவதாரம்

மது

மது உண்டவர்க்கு
மறு நாள்
மறு பிறப்பு

இன்று
இளைஞர் கலாச்சாரத்தில்
இன்றியமையாத விடயம்

காதல்

அன்பு பாசம் கருணை
அத்தனையும் கலந்து
ஆண்டவன் தந்த
அமிர்த உணர்வு


இன்று
ஆணுக்கோ அழகின் மேல்
காதல்
பெண்ணுக்கோ பணத்தின் மேல்
காதல்

Followers